காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சந்தவேலூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த திரு.ஐயப்பன் 40,என்பவர் நிலத்தரகர் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் சிவராஜ் 32 , காமராஜர் நகர், காஞ்சிபுரம் என்பவரிடம் அவரச தேவைக்காக 5 சவரன் தங்க நகையை வாங்கியுள்ளார்.
இதனை சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்நிலையில் 07.08.21 அன்று மாலை சுமார் 16.00 மணியளவில் திரு.ஐயப்பன் காஞ்சிபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க நகையை வாங்கக்கொண்டு வெளியே வந்ததாகவும், அச்சமயம் அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஓட்டிவந்த சிவராஜ், ஐயப்பன் மீது வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தி பின்னர் ஆம்புலன்ஸில் வைத்திருந்த கட்டையால் ஐயப்பனை தலை மற்றும் வலது கையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது சம்மந்தமாக ஐயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து உடனடியாக குற்றவாளி சிவராஜ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த சிவகாஞ்சி காவல் ஆளிநர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr திரு..M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.