கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள காங்கயம்பாளையம் அக்ஷயா கார்டனை சேர்ந்தவர் தென்னரசு.இவரது மகன் சிவபெருமாள் வயது 24 இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகைகளை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் இதன் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் இதுகுறித்து சிவபெருமாள் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்