கோவை : கோவை குனியமுத்தூர் கரும்பு கடை பகுதியிலுள்ள ஒரு கியாஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்த பட்டிருப்பதாக மாவட்ட குழந்தைகள் நலஅலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து குழந்தைகள் நலத்துறைஅதிகாரிபிஜு அலெக்ஸ் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த குழந்தை தொழிலாளர்கள் ஆசிப் ( வயது 14) முஸ்ரப் (வயது 16 ) முகமது ஆசிப் (வயது 13) அஸ்ரப் ( வயது 16 ) ஆகியோர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதுகுறித்து குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த கேஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான குனியமுத்தூர்காவேரி நகரைச் சேர்ந்த முகாஜிரின் என்பவர் மீது குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
