சென்னை : சென்னை மாவட்டம், மாற்று திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மறுவாழ்வு இல்லத்தில், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அறுசுவையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது.
நேற்று 25-8-2022 அன்று கண்ணகி நகரில் அமைந்துள்ள மாநில குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பசியுடன் வாடிய குழந்தைகளுக்கு உடனடி உணவு தேவை என்பதை அறிந்த, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா, குறைவான நேரத்தில், விரைவாக செயல்பட்டு, குழந்தைகளின் பசி நீக்கப்பட்டது. மேலும் மாலை சிற்றுண்டியாக லட்டு, பிஸ்கட், பழம், ஆகியவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா ஏற்பாடு செய்து இருந்தார். திரு.முகமது மூசா அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட தன் உடல் உழைப்பினை பல ஆண்டுகளாக அளித்து பலரது பசியை போக்கும் உன்னத பணியினை சிறப்பாக செய்து வருகின்றார்.