நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 26.08.2022 அன்று மதுரவாயில் பகுதியில் 50 மாற்றுத் திறனாளி குடும்பத்தில் இருக்க கூடிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் சமூக இடைவெளியை ஏற்படுத்தி, சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி, முகக் கவசம் வழங்கி சிற்றுண்டி பின்னர் கல்வி சார்ந்த உபயோகப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியினை தமிழ் நாடு வக்ஃபு வாரிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத்தலைவரும், வேலூர் தொகுதி முன்னாள் எம்.பி.யுமான மதிப்புக்குரிய எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்துகொண்டு 50 மாற்றுத்திறனாளி குடும்பங்களை சார்ந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு காலேஜ் பேக், பெரிய நோட்டு 5, பரீட்சை அட்டை, ஸ்கெட்ச் பனிரெண்டு கலர்கள் உள்ளடக்கிய பேக், கிரையன்ஸ் பனிரெண்டு கலர்கள் உள்ளடக்கிய பேக், பவுச், ஜெல் பேனா, பால் பென் பேனா, பென்சில், ஸ்கேல் , லப்பர், சார்ப்னர், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை பெற்று கொண்ட மாற்றுதிறனாளி குடும்பத்தினர் கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாடும் எங்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கியது பேருதவியாக இருப்பதாக கூறி, நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின்படி, வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.