நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா இவர்களுடன் இணைந்து ரோட்டரி சங்கம் 3232 மற்றும் பிரஜோஷ் சாரிடி சார்பாக ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்து 18-06-2022 அன்று சென்னை பெரம்பூர் இராஜிவ் காந்தி நகரில் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 13 ஆம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கபட்டன. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகள், பள்ளிகளுக்கு தேவைப்படும், புத்தக பை, நோட்டு, டிப்பன் பாக்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல், சிரமப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா, பிரஜோஷ் சாரிடி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசியத்தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் மின்னிதழின் ஆசிரியர் திரு. அ. சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சமூக சேவை பிரிவு வடக்கு மண்டல தலைவி, சமூக சேவகி மற்றும் டாக்டர் எஸ். ஈவ்லின், அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பான முறையில் நிகழ்ச்சியை வழி நடத்தி சென்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி. ஈவ்லின் அவர்கள் பாரபட்சம் பாராமல், ஆதரவற்றோர் அனைவரையும் சமமாக பாவித்து, அவர்கள் நலனுக்காக இரவு பகல் பாராமல், அவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகின்றார். குறிப்பாக பெண்கள் நலனுக்காகவும், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் அவர்களுக்கு தங்கு தடையின்றி கிடைத்திட அயராது உழைத்து வருகின்றார்.
தன் துறையான செய்திவாசிப்பாளர் துறையிலும், ஆர்வமுள்ள பலரையும் பயிற்சி கொடுத்து, அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்துள்ளார். கொரானா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய காவலர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருமாநகராட்சி மேயர், வணக்கத்திற்குரிய இரா. பிரியா ராஜன் அவர்கள் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் இன்முகத்துடன் வழங்கினார். 28 வயது வயதான இளம் பெண்ணான இவர் தான் இன்று சென்னையை தனது அதிரடி நடவடிக்கைகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் உரைய வைத்துள்ளார். திருமதி.பிரியா ராஜன் வடசென்னை பகுதியான திரு.வி.க. நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மேலும், இவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். சுமார் 340 ஆண்டுகள் பழமையான சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வானார். இதன் மூலம் சென்னையின் மிக இளம் வயது மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவரின் அதிரடி அறிவிப்புகளான விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும், மேலும் கவுன்சிலர்கள் பணியில் அவர்களது, உறவினர்கள் தலையீடு இருக்க கூடாது போன்ற அதிரடி அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
இவ்வாறாக சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் துணிச்சலுடன் பல்வேறு அதிரடியை அரங்கேற்றி வருகிறார். மேயரின் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம் கவி கலந்து கொண்டு விருந்தினர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
தாயகம் கவி, இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திரு. வி. க. நகர் தொகுதியிலிருந்து தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2021 ஆண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சிறப்பான பணியினை வெளிபடுத்தி, முதல்வரின் பாராட்டை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.வி.க நகர் தூய்மையாக இருக்கவும், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சென்னை பெருமாநகராட்சி மேயர் திருமதி.இரா.பிரியா ராஜன் அவர்களுடன் இணைந்து சீரிய முறையில் செயல்பட்டு வருகின்றார். தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு திமுக இளைஞர் பாசறை இளைஞர்களை உற்சாகப்படுத்தும் சிறந்த கழக பேச்சாளர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பிரஜோஷ் சாரிடி சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக மருத்துவ பணி ஆற்றியதற்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை டாக்டர். W.கென்னத் மார்ட்டீன், MBBS அவர்களுக்கும், சிறந்த பாடகருக்கான விருது திரு.நிட்சன் நியூட்டன் அவர்களுக்கும், சிறந்த பாடகருக்கான விருது திருமதி.ஷெர்லி பிரவீனா அவர்களுக்கும் மற்றும் சிறந்த சமுக சேவைக்கான விருது என பிற விருதுகள் இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி. இரா.பிரியா ராஜன் மற்றும் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம் கவி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திரு.வி.க நகர் பகுதி கழக துணை செயலாளர் திரு.ராஜன், திரு.புஷ்பராஜ் 71 ஆவது வட்ட கழக செயலாளர், திரு.வெங்கட்ராமன், திரு.விஜயகுமார், திரு.தேவராஜ், திரு.தேவகுமார், திரு.சேரலாதன், G. கிருஷ்ணகுமார் வழக்கறிஞர், G. ஜெகதீஷ் ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர், மற்றும் திரு.ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 71 ஆவது வட்ட கழக செயலாளர் திரு. புஷ்பராஜ் அவர்கள் திமுக சார்பாக பல நலத்திட்ட உதவிகளை முன்நின்று பொதுமக்களுக்கு செய்து வருகிறார். இந்நிகழ்ச்சியை நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் திருவள்ளூர் சமூக சேவை பிரிவு மாவட்ட பொது செயலாளர் திரு.சந்திரசேகர் தொகுத்து வழங்கினார்.
[embedyt] https://www.youtube.com/watch?v=4ChoykwnM0E[/embedyt]