நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அம்பத்தூரில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, அம்பத்தூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.ரஹீம் மற்றும் டி2 சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு.லட்சுமணன் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்.
போக்குவரத்து காவல்துறையினரின் பணி மிகவும் இன்றியமையாதது. போக்குவரத்து காவல் துறையினர் இல்லாமல் யாரும் குறித்த நேரத்திற்கு எங்கும் செல்லமுடியாது. அவர்களால் தடுக்கப்பட்ட விபத்துக்கள், காப்பாற்றப்பட்ட உயிர்கள் ஏராளம். அவர்களிடம் பிடிபட்ட குற்றவாளிகள் அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, அப்பகுதியில் பணியாற்றும் காவலர்களை சிறப்பாக வழிநடத்தி, விபத்தில்லா அம்பத்தூரை உருவாக்கிட சீரிய முறையில் பணியாற்றி வருகின்றார்.
இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகம் மதுரவாயில் தெற்கு பகுதி வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் திரு. போ.க.சரத் மற்றும் ஸ்ரீபெருமத்தூர் லாயர் அசோசிசன் துணை தலைவர் திரு.சசிராஜன் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு (05.03. 2022) சனிக்கிழமை உணவு அளித்தனர்.
உணவு வழங்கப்பட்ட பகுதிகள் அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் சிக்னல் அருகில் வசிக்கும் சாலையோரம் இருக்கக்கூடிய சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோர்கள் கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி முகக் கவசம், அளித்து வெஜிடபிள் பிரியாணி சுமார் 600 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.