இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா குமினிப்பேட்டை கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி டார்ச் லைட் வழங்கப்பட்டது. மழை காலங்களில் மிகுந்த சிரமான பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா ஒளிபரப்பு பிரிவு மாநில தலைவர் திரு.பாபு அவர்கள் ஊழியர்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா ஒளிபரப்பு பிரிவு மாநில தலைவர் திரு.பாபு அவர்கள் பல வருடங்களாக சங்கத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் அற்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். மேலும் பல்வேறு சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். மழை காலங்களில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர் குளிரில் நடுகாமல் இருக்க போர்வை வழங்கி வருகின்றார்.