மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ எனக் கூறி, மரம் வளர்ப்பின் அவசியம் தொடர்பாக அரசும், தன்னார்வலர்கள், சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மரங்கள் வெறும் நிழல் தருவது மட்டுமின்றி, பறவைகளின் வாழ்விடமாகவும், பிராணவாயு உற்பத்தி செய்யும் மையமாகவும் விளங்குகின்றன. எனவேதான், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ஒருபுறம் மரங்கள் வெட்டப்பட்டாலும், அவற்றை வளர்ப்பதன் அவசியம் குறித்து தொடர் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மரம் வளர்ப்பின் முக்கியதுவத்தை உணர்ந்து தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் மரக்கன்று கொடுக்க, அந்த மரக்கன்றை இன்றைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கைகளால் கலைஞரின் 83வது பிறந்தநாளில் முதல் மரக்கன்று நடப்பட்டது. கலைஞரின் 83வது, பிறந்த நாளில் 83,000 மரக்கன்றுகள் நட 2006-ல் உறுதியேற்கப்பட்டது. அன்று 83,000 மரக்கன்றுகள் நடும் இலக்கானது, இன்று கலைஞரின் 100 பிறந்த நாளுக்குள் 1,00,000 மரக்கன்றுகளை இலக்காக வைத்து நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் தலைமையில் மரம் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்ச்சியினை தேசியத் தலைவர் திரு.அ. சார்லஸ் அவர்கள் துவக்கி வைத்தார். சென்னையில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரித்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாராட்டி மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் சான்றிதழ்களை நேற்று வழங்கினார்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில கௌரவ தலைவர் திரு.அசோக் குமார் சாபத் அவர்களின் சிறப்பான மரம் நடும் பணியினை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. திரு. அசோக் குமார் சாபத் அவர்களால் சென்னை மாநகரில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு உள்ளது. நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில கௌரவ தலைவர் திரு.அசோக் குமார் சாபத் அவர்கள் கொரானா காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடந்த நேரத்தில், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பாக ஆதரவற்றோருக்கு ஆதரவாக உணவு அளிப்பது, நலிந்தோருக்கு மளிகை பொருட்கள் வழங்குவது, பார்வையற்றோருக்கு நலதிட்ட உதவிகள் அளிப்பது, சாலையோரங்களில் மரம் நடுவது உள்ளிட்ட நலதிட்ட பணிகளை சீரிய முறையில் சென்னை லயன்ஸ் கிளப்புடனும், காவல்துறையினருடனும் கைகோர்த்து மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன் தீப் சிங் பேடி,IAS அவர்கள், துணை ஆணையாளர்கள் திரு. எம். எஸ். பிரசாந்த் IAS அவர்கள், (பணிகள்), டாக்டர் எஸ்.மணிஷ், IAS (சுகாதாரம்) அவர்கள், திருமதி.டி. சிநேகா,IAS (கல்வி) அவர்கள், திரு. சிம்ரன் ஜீத் சிங் காஹ்லோன்,IAS தெற்கு வட்டாரம் அவர்கள், திருமதி.சரண்யா,IAS மத்திய வட்டாரம் அவர்கள், திரு. எம் சிவகுரு பிரபாகரன், IAS, வடக்கு வட்டாரம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.