நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சார்பாக, 26.05.2022 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில், மதுரவாயில் உட்பட்ட ஆலப்பாக்கம் பகுதியில் 60 மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக இடைவெளியை ஏற்படுத்தி, கைகளை சுத்தப்படுத்தி, முகக் கவசம் வழங்கி, சிற்றுண்டி மற்றும் 500 ml தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது.மேலும் 10 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சமூக சேவை பிரிவு மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களாக நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சமூக சேவைப் பிரிவு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் N. சபீர், N.மஜித், N.முகம்மது ரஃபிக், ஆகியோர் கலந்துகொண்டு 60 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உலகம் எங்கும் கொரானா என்னும் கொடிய அரக்கன் பரவி, மாற்றுத்திறனாளிகள் உட்பட, பலரின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பாக அவர்களுக்கு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உணவு மற்றும் மளிகை பொருட்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் வயிறாற உண்டு மனதார வாழ்த்தினர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், ஏழைகளுக்காக சிறப்பாக இப்பணியினை செய்து வருகின்றனர்.
[embedyt] https://www.youtube.com/watch?v=qVae_kuh9gU[/embedyt]