ஒரு கொரானா பேரிடர் காலத்தில் மாவட்ட ஆட்சியரை மாற்றுவது என்பது மிக துணிச்சலான முடிவு. அதுவும் கொரோனா அதிகம் இருக்கும் மாவட்டங்களில் ஆட்சியரை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது.
புதிதாக ஒரு ஆட்சியர் வருகிறார் என்றால், அவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு சிறப்பாக செயல்படுவது பெரிய சவால். அவ்வாறு மிகுந்த சவால்கள் நிறைந்த பணியான திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பணியினை திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடன் வழங்கி தமிழக அரசு உத்தவிட்டது. அதனை திறம்பட பணியாற்றி அனைவரது, பாராட்டையும் பெற்றுள்ளார் துடிப்பான ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.ஆல்பி ஜான் வர்கீஸ்.
ஸ்டிரிக்ட் அதிகாரி என்று பெயர் எடுத்த, துடிப்பான இளம் ஐஏஎஸ்அதிகாரிகளை தமிழ்நாடு அரசு ஆட்சியர்களாக நியமித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூவர் மாவட்ட ஆட்சியரின் நியமனம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கடந்த சூன் 14 ஆம் தேதி திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டார்.
திருவள்ளூரில் சென்னைக்கு இணையாக கேஸ்கள் பதிவாகும் நிலையில் மிக முக்கியமான கட்டத்தில் திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் நியமிக்கப்பட்டு வெற்றிகரமாக குறைத்து, திருவள்ளூர் மக்களை நோயின் பிடியிலிருந்து மீட்டுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆல்பி ஜான் வர்கீஸ். இவர் ஐஏஎஸ் ஆகும் முன் மருத்துவம் படித்தவர். திருச்சூரில் மருத்துவம் படித்துவிட்டு, அதன்பின் யுபிஎஸ்சியில் இருந்த ஆர்வம் காரணமாக, யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். இந்திய அளவில் தேர்வு எழுதியவர்களில் ரேங்க் 4 எடுத்து அசத்தினார். நேராக தமிழ்நாட்டில் போஸ்டிங் பெற்றவர், 2015ல் தேவக்கோட்டை துணை ஆட்சியர், 2018ல் தூத்துக்குடி ஆணையர், அதன்பின் 2020 சென்னை சுகாதார இணை இயக்குனர் பொறுப்புகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் சென்னை சுகாதார இணை இயக்குனராக திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் செய்த பணிகள் பெரிய வரவேற்பை பெற்றன. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் இவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.
மருத்துவர் என்பதாலும், சுகாதார துறையில் நல்ல அனுபவம் கொண்டவர் என்பவர் என்பதாலும், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். அதோடு சமூக வலைத்தளங்களில் மக்களின் கோரிக்கைக்கு உடனே பதில் அளிப்பது. சமூக வலைத்தளம், மூலம் சென்னை மக்களோடு தொடர்பில் இருப்பது, தடுப்பு பணிகளை கண்காணிப்பது என்று மக்களுக்கு நெருக்கமாக திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் இருந்தார். இவ்வாறு பொதுமக்களால் பாராட்டு பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு. ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் போலீஸ் நியூஸ் பிளஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாற்று திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 29.06.2021 செவ்வாய்க்கிழமை காலை10 மணி அளவில் மதுரவாயில் உட்பட்ட ஆலப்பாக்கம் பகுதியில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக இடைவெளியை ஏற்படுத்தி, சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி, முகக் கவசம் வழங்கி சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்னர் 10 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், தி௫வள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், ஐ.ஏ.எஸ், அவர்களுடன், தி௫வள்ளூர் கோட்டம், வ௫வாய் கோட்ட அலுவலர் (பொ) திரு.முரளி, பூவிருந்தவல்லி, வட்டாட்சியர் திரு.ஷெ. சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு 50 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அரிசி மற்றும் மளிகை பொருட்களை பெற்றுக் கொண்ட மாற்று திறனாளிகள், கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாடும் எங்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கியது பேருதவியாக இருப்பதாக கூறி, நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.