சென்னை: சென்னை பெருநகரில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்து காவல் ஆணையாளர் ஆணை.
Commissioner of Police ordered and allocated funds for the maintenance of faulty CCTV cameras in Chennai.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து மண்டலங்களில் சிசிடிவி கேமராக்கள் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, அவைகள் முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டு சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவற்றில், கிழக்கு மண்டலத்தில் 3856 சிசிடிவி கேமராக்களும், மேற்கு மண்டலத்தில் 639 சிசிடிவி கேமராக்களும், வடக்கு மண்டலத்தில் 1815 சிசிடிவி கேமராக்களும், தெற்கு மண்டலத்தி 4817 சிசிடிவி கேமராக்களும் மற்றும் போக்குவரத்து மண்டலத்தில் 1228 சிசிடிவி கேமராக்களும் பழுதடைந்த நிலையில் இருந்தமையால், மொத்த பழுதடைந்த நிலையில் உள்ள 12355 சிசிடிவி கேமராக்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்வதற்கு 2021-2022 – ம் நிதி ஆண்டில், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பராமரிப்பு தலைப்பின்கீழ் ரூ.1,17,37,250 / – நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்தொகையானது, பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்குறிப்பிட்டுள்ள 5 மண்டலங்களுக்கும் பழுதுகள் சரி செய்யும்பொருட்டு பிரித்து வழங்கி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த பழுதுகள் நீக்கும் பணியினை விரைந்து முடிக்கும்படியும், பழுதடைந்த சிசிடிவி கேமராக்களின் பழுது நீக்க பணிகள் முடிந்தவுடன், அனைத்து கேமராக்களும் நல்ல முறையில் செயல்படுகின்றனவா? என்பதைஉறுதிசெய்யுமாறும்சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்குசென்னைபெருநகரகாவல்ஆணையாளர்ஆணையிட்டுள்ளார்.