சென்னை : சென்னை மணலி புது நகர், பகுதியை சேர்ந்த ரவி என்பவர் நேற்று முன்தினம் (27.11.2020) காலை 10.00 மணியளவில் மாதவரம் மேம்பாலம் அருகில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ரவியிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்செல்லும் பொது ரவி கூச்சலிட்டு கொண்டே குற்றவாளிகளை துரத்தி சென்றுள்ளார். இதை கவனித்த M-1 மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆண்டலின் ரமேஷ் தகவலை பெற்று, சிறிதும் தாமதிக்காமல் தனது இருசக்கரவாகனத்தில் குற்றவாளிகளை துரத்தி சென்று சாஸ்திரி நகர் மெயின் ரோட்டில் சாதூர்யமாக மடக்கி பிடிக்க முயன்ற போது, பின்னால் இருந்த நபர் தப்பியோடிவிட்டார். இருசக்கர வாகனத்தை ஓட்டிய குற்றவாளி தப்பிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் திரு. ஆண்டலின் ரமேஷ் விடாமல் துரத்திச்சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை மடக்கிப்பிடித்து செல்போனுடன் M-1 மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் உதவி ஆய்வாளர் செல்போன் திருடனை துரத்தி பிடித்த சிசி.டிவி காட்சிகளை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ட்விட்டர் வலை தளத்தில் பதிவிட்டு, இந்த காட்சிகள் சினிமா படகாட்சிகள் இல்லை என்றும் நிஜவாழ்க்கையின் ஹீரோ தனி ஆளாக செல்போன் வழிப்பறி கொள்ளையனை விரட்டி பிடித்துள்ளார் என்று பாராட்டியதுடன், நேற்று (28.11.2020) மதியம் உதவி ஆய்வாளர் திரு.ஆண்டலின் ரமேஷை நேரில் அழைத்து கேடயம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி உடனமர்ந்து தேநீர் வழங்கி கௌரவித்தார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா