திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பஜார் வீதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொன்னேரி தொகுதி பகுதிகள் மீஞ்சூர் நகரம் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் மீஞ்சூர் நடுவன் ஒன்றியம் மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றியம் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் தொகுதி செய்தி தொடர்பாளர் ஜாக் என்ற சரவணன் மற்றும் கோ.ஷோ. ரேயா ஶ்ரீ, வரவேற்பு அளித்தனர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் பாபு, தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் மா.பாரதிராஜா, தொகுதி இனச் செயலாளர் லோ.சத்யராஜ், தொகுதி துணை செயலாளர் தினேஷ் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், கலந்துகொண்டு திமுக அரசின் அவல நிலைகளை எடுத்துரைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் திருவள்ளூர் மண்டல செயலாளர் வழக்கறிஞர் ரா. ஏழுமலை, வடசென்னை மண்டல செயலாளர் வழக்கறிஞர் ரா. கோகுல், மணலி இடி முரசு, மா.கோபி மாநில நிதி செயலாளர் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இளஞ்செழியன், காட்டுப்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி கடலி, ஒருங்கிணைப்பாளர்கள் ஜோசப், முத்து, லோகநாதன், வடிவேல், சதீஷ், கமல், மற்றும் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வழக்கறிஞர் பொன்.கு. கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு