நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது, லாட்டரி சீட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனை நடத்தி இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் படி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசன், IPS உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசன், IPS அவர்கள் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து செய்யப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.7,60,000 மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 7 குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.