என் தந்தை அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர். காலை 6 மணிக்குப் பிறகு எங்களில் எவரேனும், படுக்கைகளில் தூக்கத்தில் இருந்தால், அவரது இடி போன்ற குரல் போதும், நாங்கள் படுக்கையில் இருந்து, குதித்து ஓடுவோம். அவர் வலுவான ஒழுக்க நெறியை பின்பற்றுபவர். நாங்கள் அதனை மீறும்பட்சத்தில், அவருடைய தடி தான் பேசும்.
அவரது கடின உழைப்பு வாழ்க்கை முறையும், அவரது இரக்க மனப்பான்மையும் நான் மேன் மேலும் வளர பல பாடங்களை எனக்கு கற்பித்தன. என் தந்தை விவசாயத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர். அவரின் சுறுசுறுப்பான விவசாயத்தில் மூழ்கிய பின்னர் அவரது வணிகம் இரண்டாம் நிலை ஆனது. விவசாயத்தின் மீது உள்ள ஆர்வத்தால், ஒவ்வொரு மரத்தையும் கவனித்துக்கொள்வதற்காக அவர் நாள் முழுவதும் பண்ணையில் செலவிடுவார்.
அவர் எங்களுக்கு மற்ற எதையும் விட என் வாழ்க்கையில் பின்பற்ற தேவையான நற்பண்புகளை விட்டு சென்றுள்ளார்.
இனிய தந்தையர் தினம்!
திரு. டேவிட்சன் தேவாசிர்வாதம்
காவல் ஆணையர்
மதுரை மாநகர காவல்