சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை ஆனந்தா கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் தமிழ்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். பின்னர் கல்லூரி மாணவர்கள் இடையே உரையாற்றும் போது தமிழக முதல்வரின் கனவு திட்டமானது நான் முதல்வன் திட்டம், கல்வியை மாணவர்கள் சாதாரணமாக நினைக்க வேண்டாம் . நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஒரு கோடி வரை கடன் உதவி வழங்கப்படும். கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் நாள் தோறும் திறனை வளர்ந்து கொள்ள வேண்டும். கல்வி மிகப்பெரிய ஆயுதம், உங்களுடைய எதிர்காலத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளிடையே கல்வியின்பயன், செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி பதில் கூறிய மாணவர்களுக்கு புத்தகங்களை சைலேந்திரபாபு பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்திப் பின்போது தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, மேல்படிப்பு, சுய தொழில் காணிப்பாளர் தொடங்க வழிமுறை குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு முழுவதும் நடை பெற்று வருகிறது. சைபர் குற்றங்கள் அதிகரிக்க காரணம் பல இடங்களில் சைபர் குற்றத்தையே தொழிலாக மாணவிகள் வைத்துள்ளனர். வடமாநிலங்களில் சைபர் குற்றத்தையே ஒரு ஊரே இந்தத் தொழிலை செய்கிறது. ஆதார் கார்டு, வங்கி தகவல் மூலம் தகவலை திருடி பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். கடந்த வருடம் 82,000 புகார்கள் ஆன்லைன் மூலம் வந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு சராசரியாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் ஏமாறுகின்றனர். அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்கள் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர். காவல்துறை எவ்வளவு சொன்னாலும் கல்வி அறிவு மற்றும் கேட்பதில்லை. கொள்ளையடிப்பவன் பேராசையை பொதுமக்களிடையே தூண்டி விடுகிறான், ஓடி.பிஐ வெளியே பகிரக்கூடாது என கூறினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மோகன சந்திரன், மாவட்ட உதவி காவல் கண் ஸ்டாலின், கோட்டாட்சியர் பால்துரை, கல்லூரி செயலர் செபாஸ்டியன், முதல்வர் ஜான் வசந்தகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாவட்ட அளவில் பல்வேறு கல்லூரி மாணவ 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி