தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை சிறப்பு பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனைகளில், பெருமளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் காவல் துறையினர் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில்,கஞ்சா – 344.21 கிலோ,திருவாரூர் மாவட்டத்தில் – 25.21 கிலோ,நாகப்பட்டினம் மாவட்டத்தில் – 309.4 கிலோ,மயிலாடுதுறை மாவட்டத்தில் – 11.72 கிலோஎன மொத்தம் 690.54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போதைப்பொருட்கள், (29.12.2025) அன்று தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு ஜியாவுல் ஹக் இ.கா.ப தஞ்சாவூர் அரசு காவல் துறை திண்ணத்தில், சட்ட விதிமுறைகளின்படி அழிக்கப்பட்டன. அழிப்பு பணிகள், Medi-Care Enviro System என்ற அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலம் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து

திரு.முகமது மூசா
















