காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுதர்சன் நகரில் வசிக்கும் கவிதா க/பெ.ராஜு, என்பவர் 03.09.2021 அன்று வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை அசோக் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பிறகு அன்று மாலை வீட்டிற்கு வந்துபார்த்தபோது.
அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 43 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்த காஞ்சி தாலுக்கா போலிசார் கை விரல்ரேகை நிபுணர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.
இது சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்களின் உத்தரவின்படி காவல் ஆய்வாளர் திரு.ராஜகோபால் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டதில்,
1 ) மனோஜ் 35. 2 ) ராஜாராம் 26. 3 ) கார்த்திக் ராஜா 24. மற்றும் 4 ) திலிப் திவாகர் 26. ஆகியோர்கள் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவர்களை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடமிருந்து 43 சவரன் தங்க நகைகள் மீட்டகப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.