திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்பவானோடை வடகாடு பகுதியில் சாமி கண்ணு என்பவருடைய மகன் சஞ்சய் காந்தி வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த வீட்டில் வைரக்கண்ணன் மற்றும் அவர் மருமகள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 2923 இரவு 10:30 மணி அளவில் வெளியில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு வைரக்கண்ணு வெளியே வந்து பார்த்தபோது முகமூடி அணிந்து கொண்டு நான்கு நபர்கள் அவர் வீட்டிற்குள் சென்றனர் அப்பொழுது வைரக்கண்ணு அவரு மருமகள் இருவரும் கூச்சல் போட்டதில் அக்கம் பக்கத்தினர் கூடினர் அப்பொழுது அந்த நான்கு பேரும் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார்.
இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் திரு சரவணன் அவர்களும் முத்துப்பேட்டை உட்கோட்ட தனிப்படையினர் காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டனர் இதில் நாச்சி குளத்தில் உள்ள ஒரு கடையில் உள்ள சிசி. டிவி கேமராவில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாடுவது தெரிய வந்தது. அந்த நபர்களை கண்டறிந்து அம்மனூர் கச்சனம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் அம்மனூர் ராஜேஷ் விளத்தூர் கார்த்திக் ராஜா கச்சனம் சிவனேஷ் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்