தென்காசி: தென்காசி மாவட்டம் VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் திருமதி. கௌசல்யா அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக காவல்துறையினரை கண்டதும் தப்பித்து ஓட முயன்ற சுரேஷ் என்பவரை பிடித்து அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தொடர்பாக மேற்படி நபரிடம் விசாரணை செய்ததில் சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி நாட்டு 8 வெடிகுண்டுகளாக தயார் செய்து, அதில் இரண்டு குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும் ஒரு குண்டு கார்த்திக் என்பவருக்கும் கொடுத்து வைத்திருப்பதாகவும், மூன்று குண்டுகளை 30.03.24 அன்று வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகன் சுரேஷ் 34, கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கார்த்திக்(25) சுரண்டை பாண்டியன் என்பவரின் மகன் மனோ சங்கர்19. மற்றும் சுரண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவர் மகன் நாகராஜா 35. ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.