பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கிய பிரகாசம் அவர்களின் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 16.02.2022-ம் தேதி காரியானூர் வெள்ளுவாடி போன்ற இடங்களில் சிறப்பு ரோந்து அலுவல் புரிந்தும் காரியானூர் கிராமம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த பெரியசாமி என்பரை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர், கைது செய்தும் அவர் விற்பனைக்காக பயன்படுத்திய 2 லிட்டர் மதிப்பிலான 20 பாக்கெட் நாட்டு சாராயத்தை கைப்பற்றி அதே இடத்தில் அழித்தும் நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.