பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி, சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 18.11.2021-ம் தேதி கள்ளப்பட்டி பஞ்சாயத்து கிணறு அருகே, அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ராமகிருஷ்ணன், என்பரை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர், கைது செய்தும் அவர் விற்பனைக்காக பயன்படுத்திய 7 லிட்டர் மதிப்பிலான நாட்டு சாராயத்தை கைப்பற்றியும், பின்னர் நாட்டு சாராயத்தை விற்பனை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.