சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலைய பகுதியில் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் நகர் பகுதிகள் உள்ள பொது மக்களுக்கு நாட்டுப்புற கலைஞர் மூலம் கொரோனா விழிப்புணர் நிகழ்ச்சியில் சமூக இடைவெளி, கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது பற்றியும், அவசியமில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை தவிர்ப்பது பற்றியும், வெளியே செல்லும் பொழுது கட்டாயம் முகக் கவசம் அணிவது அவசியம் என்பது பற்றியும் பொதுமக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை