தருமபுரி: தருமபுரி வனசரக அலுவலர் (வனப் பாதுகாப்பு படை) திரு.ஆலயமணிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அலுவலர்களுடன் ஒகேனக்கல் நாடார்கொட்டாய் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர் அப்போது அந்த பகுதியில் சோமு என்பவர் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தோட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததும் அதனை வேட்டைக்காக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது இதையடுத்து அங்கிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் சோமு 34, அவருக்கு உடந்தையாக இருந்த மாரிமுத்து 30, அருள்செல்வம் 34. ஆகிய மூன்று பேரையும் பிடித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.