ராணிப்பேட்டை : நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில், இன்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப., அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மேலும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 16 காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சர் காவல் பழக்கத்தினை வழங்கியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்கள் முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருமதி கீதா, துணை காவல் கண்காணிப்பாளர், ராணிப்பேட்டை உட்கோட்டம் அவர்களும் இதர அரசுத்துறை அலுவலர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்