மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலைசிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியீடு உள்ளது. இதில் தமிழத்திற்கு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சேலம் மாநகர காவலுக்கு உட்பட்ட சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு 2வது இடம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த விருது குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுதல், குற்ற பதிவேடுகளை பராமரித்தல், புகார் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் முறை, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பத்து சிறந்த காவல் நிலையங்கள்,
1. மணிப்பூர் – தௌபல் – நோங்போக்செக்மை காவல்நிலையம்
2. தமிழ்நாடு – சேலம் மாநகர் – சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம்
3. அருணாசலம் – சாங்லங் – கர்சங் காவல்நிலையம்
4. சட்டீஸ்கர் – சூரஜ்புர் – ஜில்மிலி காவல்நிலையம்
5. கோவா – தெற்கு கோவா – செங்குயெம் காவல்நிலையம்
6. அந்தமான் – நிகோவார் தீவுகள் – வடக்கு மற்றும் மத்திய அந்தமான் – காலிகட் காவல்நிலையம்
7. சிக்கிம் – கிழக்கு மாவட்டம் – பாக்யோங் காவல்நிலையம்
8. உத்தரப்பிரதேசம் – மொராதாபாத் – காந்த் காவல்நிலையம்
9. தாத்ரா மற்றும் நாகர் ஹேவேலி – தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி – கான்வெல்
10. தெலங்கானா – கரீம்நகர் – ஜம்மிகுண்டா நகரம் காவல்நிலையம்.
தேர்வு எவ்வாறு நடைபெறும் ?
750க்கும் மேற்பட்ட காவல்நிலையங்கள் இருக்கும் மாநிலங்களில் இருந்து, தலா 3 காவல் நிலையங்களும், இதர மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் இருந்து தலா 2 காவல் நிலையங்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து தலா 1 காவல் நிலையமும் இந்த விருது பட்டியலுக்கு தேர்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதிலிருந்து தேர்வுக் குழுவினரால் 75 காவல்நிலையங்கள், அடுத்த கட்டத்திற்கு தகுதிபெறும். இறுதித்தேர்வில் தொழில்நுட்பத்தை கையாண்டு குற்றங்களை கண்டு பிடிப்பது, உள்ளிட்ட 19 கட்டமைப்புகள் கவனத்தில் கொண்டு சிறந்த 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இதனடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், காவல்நிலையத்தில் கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. சூர்யா பிரியா
சேலம் மாவட்ட தலைவி
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா