திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி நாங்குநேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.மார்க்ரெட் தெரசா அவர்கள் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்கள் மத்தியில் காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றி எடுத்துக்கூறி, பெண்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என எடுத்துக் கூறி, தங்களுக்கு ஆபத்து நேரிடும் அல்லது தங்களை யாராவது பின் தொடர்வது போல் தெரிந்தால், அந்த செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்துங்கள், அதன் மூலம் காவல்துறை நீங்கள் இருக்கும் இடம் கண்டறிந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி