நாகப்பட்டினம் : தீபாவளி பண்டிகை நாளில் நாகையில் பொதுமக்கள்களின் பாதுகாப்பு கருதி நாகை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் கடைதெரு, நீலா தெற்கு வீதிகளில் போலிசார் சழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை ஆர்தர் முக்கூட்டு, பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தீவரமாக கண்காணக்கப்பட்டு வருகிறது. மேலும் கோரானா வைரஸ் தொற்று குறித்தும் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் நீலா கீழவீதி மற்றும் தெற்கு வீதி, நாலுகால் மண்டபம் ஆகிய இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்ப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்
கண்காணிப்பு கேமராக்கள் முலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம்பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையே பின்பற்றி விபத்தில்லா தீபாவளிகை கொண்டாட நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.