நாகப்பட்டினம் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் தலைமையேற்று சிறப்புரை ஆற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண்கள் இன்று நாட்டில் பல்வேறு துறைகளில் ஆகச்சிறந்த அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள் எனவும் பெண்களுக்கான சமத்துவத்தையும் சம உரிமையையும் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் ஒவ்வொரு தனி மனிதனும் கடமைப்பட்டவர்கள் எனவும் பெண்களின் முன்னேற்றத்திற்கு அளவுகோல் இடாமல் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதே பாலின பாகுபாட்டை கலைந்து பெண்களுக்கான சம உரிமையையும் சமநிலைப்பாட்டை உணர்த்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் பெண்கள் மத்தியில் இவ்வாறு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முருகேஷ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர், மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் ,காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.