நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா.இகாப அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது இதில் கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் என மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் இன்று மாவட்ட காவல்துறை சார்பில் 300க்கு மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து உணவு பரிமாறி வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜாட் சதுர்வேதி.இகாப அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு முருகேஷ் அவர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ,ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா