நாகப்பட்டினம்: இந்திய குற்றவியல் சட்டம் (ஐ,பி,சி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சி,ஆர்,பி,சி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐ,இ,ஏ ) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா சங்ஹிதா2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதிநியம் 2023 ஆகிய 3 சட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் நாடெங்கும் அமலுக்கு வரும் என மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது.
இதையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காலனிய ஆதிக்கத்துக்கு ஏற்றார்போல் இயற்றப்பட்ட சட்டங்களை மாற்றிவிட்டு தற்கால நவீன இந்தியாவிற்கு ஏற்ற போல் மாற்றி அமைப்பது இந்த புதிய குற்றவியல் சட்டத்தரத்தின் நோக்கமாக கருதப்படுகிறது. மேலும் புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள நேர்மறையான அம்சங்களையும் மேம்படுத்தப்பட்ட மாற்றங்களையும் நாட்டின் அனைத்து காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
இதற்கான பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் புதிய சட்டங்கள் குறித்த சரியான புரிதலுடன் சரியான முறையில் தன்னம்பிக்கையும் மேம்படுத்தும் வகையில் அமைகிறது. இதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் புதிய குற்றவியல் சட்ட அறிவு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த சட்ட அறிவு பயிற்சியானது இன்று முதல் நாள் தொடங்கப்பட்டது. நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப மற்றும் நாகை,CJM திருமதி கார்த்திகா அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.