நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 31-வது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இ.கா.ப அவர்கள் ஆலோசனைப்படி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து உட்கோட்டத்திலும் தன்னார்வலர்கள்,பொதுமக்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியயை நடத்தினார்கள்.
இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு வாரம் 20.01.2020 முதல் 27.01.2020 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு வாரத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டத்திலும் குறிப்பாக நாகப்பட்டினம் நகரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் முதல் நீலா மேற்கு வீதி, நீலா தெற்கு வீதி,நீலா கிழக்கு வீதி ஆகிய முக்கிய விதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதே போன்று குத்தாலம் காவல் நிலையம் மற்றும் சீர்காழி காவல் நிலையம் உள்ளிட்ட ஆகிய அனைத்து காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்க பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் , மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ஓட்டுநர் பயிற்சி இருசக்கர வாகன ஓட்டுனர் நலச்சங்கத் தலைவர் மகளிர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர் மேலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வநாகரத்தினம் இ.கா.ப அவர்கள் சாலை பாதுகாப்பு வாரம் முழுதும் பொதுமக்களிடம் சாலை விதிகள் தொடர்பாக விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.