திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையம் சோதனை சாவடியில் இரண்டு 2 ANPR (Automatic Number Plate Recognition) CCTV நவீன கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அப்பகுதியில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், அந்நிய நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கவும் இந்த CCTV கேமராக்கள் காவல்துறையினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா