இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறந்து வைத்து, தலைமை தாங்கினார்கள்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திருமதி.தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துகருப்பன் (இணைய வழி குற்றப்பிரிவு), இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்