சென்னை: சென்னை எண்ணூரில் அனல் மின் நிலையம் அருகே வட மாநிலத்தைச் சார்ந்த குற்றவாளியை சென்னை திருவொற்றியூர் காவலர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில காவலர்கள் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த சுகர் கஞ்சு வயது 31 என்ற நபர் மீது அம்மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது மேலும் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிப்பதாகவும்.
அம்மாநிலத்தில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சுகர் கஞ்சு தமிழ்நாட்டில் தலைமறைவாகி வாழ்ந்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலும் அவரது செல்போனின் சிக்னல் தமிழ்நாட்டில் சென்னையில் இருப்பதாக அறிந்த தகவலின் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த காவலர்கள் சென்னை மாநகர காவல் நிலையத்தில் தொடர்புகொண்டு விசாரணையில் ஈடுபட்டனர்
அப்போது சென்னை எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல் மின் நிலையத்தில் கடந்த ஆறு மாத காலமாக வேலை செய்து வருவதாகவும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாதவரம் துணை ஆணையாளர் திரு.சுந்தரவதனம் மற்றும் உதவி ஆணையாளர் திரு.பிரம்மானந்தம் ஆய்வாளர் திரு.கிளாட்சன் டேவிட் தலைமைல் தனிப்படை அமைக்கப்பட்டு நள்ளிரவில் எண்ணூரில் குற்றவாளியை கைது செய்து எண்ணூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு பின்னர் ஜார்கண்ட் மாநில காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் வட மாநிலத்தைச் சார்ந்த குற்றவாளி மாவோயிஸ்ட் என்றும் கூறப்படுகிறது சென்னை எண்ணூர் பகுதியில் அவர் மீது எந்த ஒரு குற்ற வழக்கும் இல்லாததாலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் சென்னைக்கு வந்ததாலும் குற்றவாளியை ஜார்க்கண்ட் மாநில காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை