நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கு.ஜவகர்.இகாப ., அவர்களின் உத்தரவின் பேரில் 10 சோதனை சாவடிகள் அமைத்து தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் (01.04.2023) ஓர் குடி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 120 லிட்டர் பாண்டி விச சாராயமும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனமும்,மேலும் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் இதுபோன்ற மதுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.