வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் மற்றும் காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பழனி அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தை ஒட்டி உள்ள கிறிஸ்டின்பேட்டை சோதனைச் சாவடியில் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் கடத்துவதை தடுக்கும் பொருட்டு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போதைப்பொருட்களை விற்பனை செய்யப்பட்டாலும் / பயன் படுத்தப்பட்டாலும் 9092700100 WhatsApp எண்ணின் மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்