தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இரவு 10 மணிக்கு கடைகள் அனைத்தும் அடைத்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் , மார்க்கெட்டின் மெயின் கேட் மட்டும் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் வெளியூரில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் காய்கறிகள் இறக்குவதற்காக திறந்தே இருக்கும்.
இந்நிலையில் நகராட்சி விதிமுறை என்று கூறி மார்க்கெட்டின் அனைத்து வாசல்களும் இரவில் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்றைய தினம் (திங்கள்கிழமை) இரவு குத்தகைதாரர் நகராட்சி விதிமுறைப்படி மெயின்கேட்டை அடைக்க முயன்றுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் அடைப்பதால் வெளியூரில் இருந்து வரும் காய்கறிகளை இறக்க முடியாத நிலை ஏற்படும் என்றும், பழைய நிலையை தொடர வேண்டும் என்று கூறியும் நகராட்சிக்கு எதிராக பல்வேறு கண்டண கோசங்களை எழுப்பினர்.
நள்ளிரவில் ஏற்பட்ட போராட்டத்தை தெரிந்து கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் கீழ் மார்க்கெட் வியாபாரிகள் தனது கண்டண போராட்டத்தை உடனடிமாக கைவிட்டனர். இந்த சம்பவத்தால் நள்ளிரவு அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி