நெல்லை : நெல்லை டவுன் தண்டிய சாவடி தெருவில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனிமையில் தவித்து இருப்பதாக வந்த தகவலின் பேரில், 19-10-2020-ம் தேதியன்று அதிகாலை 1.30 மணியளவில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நெல்லை டவுன் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.பாத்திமாபார்வீன் அவர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முத்துராஜ் அவர்கள், ஆட்டோ ஓட்டுனர்களின் உதவியுடன், அந்த மூதாட்டியை மீட்டு, நெல்லை பழைய பேட்டையில் உள்ள சோயா காப்பகத்தில் ஒப்படைத்தார்கள். இந்நிகழ்வை அப்பகுதியில் உள்ள பொது மக்கள், உதவி ஆய்வாளரின் செயலை பாராட்டினார்கள்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி