வேலூர் : வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் திரு. M.S. முத்துச்சாமி இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இரவு ரோந்து வாகனங்கள் சரிவர பணியில் உள்ளதா, போலீசார் சரியான முறையில் அவர்கள் பணியில் செயல்படுகிறார்களா?. என்ற அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். மேலும் காட்பாடி ரயில் நிலையத்தில் இரவு நடைமேடை யில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடவடிக்கைகளையும் அவர்கள் வைத்திருக்கும் பைகளை சோதனை மேற்கொண்டனர். பின்னர் சந்தேகப்படும்படியான நபர்களை FRS SOFT WARE உதவியுடன் குற்றவாளிகளா என சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கிரீன் சர்க்கிளில் வாகன தணிக்கை மற்றும் இரவு பீட் காவலர்களை தணிக்கை செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்