சென்னை: கொரானாவிலிந்து இந்தியா மீண்டு வரும் நிலையில், இன்னும் முழுமையாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மாற்று திறனாளிகள் பலர் இயல்பாக பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கம் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நலிவுற்ற மாற்று திறனாளிகள் 42 பேருக்கு 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
போரூர் ஆலப்பாக்கம் பகுதியில் 26.02.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை மாநகராட்சி அரசு பள்ளியில் 42 மாற்றுத்திறனாளி களுக்கு ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் 42 மாற்றுத் திறனாளிகளை அழைத்துவரப்பட்டு போதுமான சமூக இடைவெளியை பின்பற்ற வைத்து மாஸ்க் அணிய வைத்து பழச்சாறு, பிஸ்கட், தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டது.
பின்பு அழகிய முறையில் அவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகளை இலகுவான முறையில் பெறுவதற்கான வழிமுறைகளையும் RTI ரமேஷ் அவர்கள் சொற்பொழிவாற்றி விளக்கினார்கள்.
அதன்பின்பு ₹1200 மதிப்பிலான ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களை 42 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.சீதா லட்சுமி அவர்கள் நல்லாசியுடன், சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மதிப்புக்குரிய திருமதி.சுகந்த மலர் மற்றும் சமூக ஆர்வலர் “RTI” ரமேஷ் அவர்கள் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கினார்கள்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் மளிகை பொருட்கள் வழங்கினார்கள்.