சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து வசூலித்த பணத்தில், இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.1,25,000/- மற்றும் கணவரை இழந்த 10 பெண் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல்துறையினருக்கு உறுதுணையாகவும், பல்வேறு முக்கிய பணிகளுக்கு உதவியாகவும், ஊர்க்காவல் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 250 ஊர்க்காவல் படை வீரர்கள் இணைந்து, அவர்களது ஊர்க்காவல் படையில் 08.10.2020 அன்று இறந்த மோகனவேல் என்ற ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு மற்றும் கணவனை இழந்த பெண் ஊர்க்காவல் படையினருக்கு உதவுவதற்காகவும், பண வசூல் செய்தனர்.
நேற்று (29.12.2020) காவல் ஆணையரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள், மேற்படி ஊர்க்காவல் படை வீரர்கள் வசூலித்த பணத்தில் ரூ.1,25,000/-க்கான காசோலையை இறந்த மோகனவேலின் மனைவி தீபா மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்கினார். மேலும், ஊர்க்காவல் படையில் கணவரை இழந்த 10 பெண் ஊர்க்காவல் படையினருக்கு 10 தையல் இயந்திரங்கள் வழங்கி, அனைவரும் வாழ்வில் முன்னேறி தமது குடும்பத்தை நல்லமுறையில் உயர்த்திட வாழ்த்தியதுடன், சென்னை பெருநகர காவல்துறைக்கு உறுதுணையாகவும், சிறப்பாகவும் பணி செய்து வரும் ஊர்க்காவல்படை வீரர்கள் அனைவரையும் வாழ்த்தினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா