திருநெல்வேலி: கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் திரு.M. டேவிட் ராஜா, அவர்கள்,ஆதரவின்றி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு, தொடர்ந்து உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிகள் செய்து வருகிறார். இச்செய்தியை அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,IPS., அவர்கள்,
செய்தியாளர் திரு. டேவிட்ராஜா, அவர்களின் தன்னலமற்ற மக்கள் சேவையை பாராட்டும் விதமாக நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து, நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை