திருச்சி: 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்சி மாநகரில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களின் போது மாநகர காவல் துறையுடன் இணைந்து சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் உதவி செய்தும், காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததில் உதவியாக இருந்தவர்கள் மற்றும் விபத்துகாலத்தில் தகவல் அளித்தல் போன்ற உயிர்காக்கும் செயல்களை செய்த 9 நபர்களுக்கு நற்கருணை வீரன் விருது வழங்கும் விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கோல்டன் ஜூபிலி ஹாலில் 02.02.2021 நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சி மாநகர ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப. அவர்கள் தலைமை தாங்கி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். மேலும் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் திரு. ஆ பவன் குமார் ரெட்டி இ.கா.ப., குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் திரு வேதரத்தினம், கல்லூரி முதல்வர் முனைவர் பால் தயபாரன், கல்லூரி Dean முனைவர் ஆனந்த் கிடியோன் மற்றும் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் திரு வடிவேல் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்