திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் காவல் நிலையம், வீதிவிடங்கண் கிராமம்,
பெரும்படுகை, வா.ஊ.சி நகரைச்சேர்ந்த வீரபத்திரன் என்பரின் மகன் கேசவன் என்பவர்
தொடர்ந்து சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நன்னிலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர்மீது மது விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாலும், இதே குற்றத்தை அவர் தொடர்ந்து செய்து
வருவதாலும், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார்,
அவர்களின் பரிந்துரையின் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்
படி (11.04.2023) குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது குண்டர் தடுப்புசட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.