சென்னை: வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ் (எ) லிங்கேஷ்வரன், வ/23, என்பவர் மீது J8 நீலாங்கரை காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கு உள்ளது. இந்நிலையில் லிங்கேஷ் (எ) லிங்கேஷ்வரன் கடந்த 12.3.2021 அன்று அடையாறு துணை ஆணையாளர் அவர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால், லிங்கேஷ் (எ) லிங்கேஷ்வரன் கடந்த 25.05.2021 அன்று J8 நீலாங்கரை காவல் நிலைய எல்லையில் டேவிட் என்பவரை கத்தியால் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
ஆகவே நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய அடையாறு துணை ஆணையாளர், திரு.வி.விக்ரமன், இ.கா.ப அவர்கள் குற்றவாளி, லிங்கேஷ் (எ) லிங்கேஷ்வரன் கு.வி.மு.ச. பிரிவு 110ன் கீழ் நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 275 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து 04.06.2021 அன்று உத்தரவிட்டார். அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.