கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவருக்கு ஓசூர் முதலாம் வகுப்பு நிர்வாக நடுவர் மற்றும் சார் ஆட்சியர் அவர்களால் (07.06.2022) – ல் ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை (BOND) அளித்திருந்த நிலையில் பிணை உயிர்ப்பில் இருந்த போதே பிணையின் கட்டுப்பாட்டினை மீறி மீண்டும் அடிதடி வழக்கில் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் திரு.சிவகுமார் அவர்களால் ஓசூர் முதலாம் வகுப்பு நிர்வாக நடுவர் மற்றும் சார் ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியதன் பேரில் மீதமுள்ள ஆறு மாதங்களை தண்டனை காலமாக அறிவித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.