காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இதன்படி சிவகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் அவரின் பரிந்துரையின்பேரில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி சுகுமார் ( எ ) காளி 22. என்பவரை சட்டப்பிரிவு 110 குவிமுச – வின் படி ஒரு ஆண்டிற்கு நன்னடத்தை பிணையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் 18.12.2021 அன்று ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில் மேற்படி, சுகுமார் ( எ ) காளி நன்னடத்தை பிணையை மீறி 21.12.21 அன்று பல்லவர்மேடு மேற்கு பகுதியில் உள்ள முட்புதர் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சா விற்பனை செய்தது சம்மந்தமாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
எனவே . மேற்படி நபர் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 348 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார் . இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைதுசெய்த காவல் ஆய்வாளர், சிவகாஞ்சி காவல் நிலையம் மற்றும் அவரது குழுவினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்