காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவடி பவானி 52. என்பவர் 110 குவிமுச – வின் படி ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 20.09.2021 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி, .பவானி 52 . என்பவர் 31.01.2021 அன்று மீண்டும் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்தது சம்மந்தமாக விஷ்ணுகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். எனவே , மேற்படி பவானி 52. நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 221 நாட்கள் சிறையில் அடைக்க நேற்று (11.02.2022) காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்